தனுஷின் 43-வது படத்தை இயக்குபவர் யார் தெரியுமா?

தனுஷின் 43-ஆவது படத்தை ‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’, ‘நரகாசூரன்’  பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்!

செய்திகள் 3-Feb-2020 12:48 PM IST Top 10 கருத்துக்கள்

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தனுஷின் 40-ஆவது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் இப்போது ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் ‘கரணன்’ மற்றும் ஆனந்த் எல்.ராய் இயக்கும் பாலிவுட் படம் அகியவற்றில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தனுஷின் 43-ஆவது படமாக உருவாகும் இந்த இந்த படத்தை ‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’, ‘மாஃபியா’ ஆகிய படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்தை தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘பட்டாஸ்’ படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. ஏற்கெனவே சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ‘ராட்சசன்’ பட புகழ் ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த பட வேலைகளும் நடந்து வருகிறது. ஆனால் இந்த படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது என்றும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக இன்னும் சில காலம் தேவைப்படுகிறது என்பதால் இப்படத்திற்கு முன்னதாக கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் ஆகிய படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக தனுஷுடன் கை கோர்க்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். தனுஷும், கார்த்திக் நரேனும் முதன் முதலாக இணையும் இப்படத்திற்கான கதாநாயகி மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்

#Dhanush #KarthickNaren #GVPrakashKumar #SathyaJyothiFilms #Dhanush43 #D43 #MafiaChapterOneFromFeb21st #D40 #KarthickSubbaraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;