கார்த்தியின் ‘கைதி’ ஹிந்தி ரீ-மேக் - அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து  ‘கைதி’ படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்து தயாரிக்கிறது!

செய்திகள் 3-Feb-2020 8:11 PM IST Top 10 கருத்துக்கள்

’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து சென்ற ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘கைதி’. கார்த்தி நடித்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தை வேறு மொழிகளில் ரீ-மேக் செய்து தயாரிக்கும் உரிமையை பெறுவதற்கு பல நிறுவனங்களுக்கு இடையில் போட்டிகள் நிலவி வந்தன. இந்நிலையில் ‘கைதி’ படத்தை ஹிந்தியில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் பிரபல ‘ரிலையன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்க முடிவு செய்து அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சற்று முன் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இப்படத்தில் பணியாற்ற இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் ‘கைதி’ ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது என்று வெளியாகியுள்ள தகவல் கார்த்தி ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தரும் செய்தியாகும்!

#Kaithi #Karthi #KaithiInHindi #LokeshKanagaraj #KaithiHindiRemake #DreamWarriorPictures #SRPrabhu #SRPrakashBabu #RelianceEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;