பாலிவுட் பிரபலத்துடன் கை கோர்க்கும் அமலாபால்!

பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் இயக்கத்தில் ஹிந்தி  வெப் சீரீஸில் நடிக்கும் அமலாபால்!

செய்திகள் 4-Feb-2020 12:12 PM IST Top 10 கருத்துக்கள்

சினிமாவை போல இப்போது வெப் தொடர்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் சினிமாவில் நடித்துக்கொண்டே வெப் தொடர்களில் நடிக்கவும் நடிகர்கள், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏற்கெனவே நிறைய பிரபலங்கள் வெப் தொடர்களில் நடித்து வரும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டு நடித்து வரும் நடிகையான அமலா பாலும் ஒரு வெப் சீரீஸில் நடிக்க உள்ளார். ஆனால் அவர் முதன் முதலாக நடிக்க இருக்கும் இந்த வெப் சீரீஸ் ஹிந்தியில் உருவாகிறது. பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான மகேஷ் பட் இயக்கும் வெப் சீரீஸ் இது. இந்த வெப் தொடரில் அமலா பாலுடன் அம்ரிதா பூரி, தாஹிர் ராஜ் பசின் ஆகியோரும் நடிக்கின்றனர். 70-களில் பாலிவுட்டில் நடந்த காதல் கதையை மையமாக வைத்து இத்தொடர் உருவாக உள்ளது. இந்த தொடரில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் விஷேஷ் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் கை கோர்த்துள்ளது. இந்த தகவலை அமலா பாலே வெளியிட்டுள்ளார்.

‘ஆடை’ படத்தை தொடர்ந்து அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‘அதோ அந்த பறவை போல’. இந்த படம் காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் பாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார் அமலா பால்!

#AmalaPaul #MaheshBhatt #TahirRajBhasin #AmritaPuri #VisheshFilms #JioStudios #Pushpdeep Bharadwaj #Webseries #AdhoAndhaParavaiPola #AdhoAndhaParavaiPolaFromFeb21st

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;