வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேர், பிமேஜி, கருணாகரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள் என்ற தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இப்போது இந்த படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, டானியில் ஆனி பாப், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நேற்று (ஃபிப்ரவரி-3) நடந்த சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ‘மாநாடு’ படக்குழுவினர் பெரும்பாலானோரும் கலந்துகொண்டு சிம்புவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் இப்போது, ‘மாநாடு’வில் மேலும் 4 பிரபலங்கள் இணைந்துள்ள தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனிக்க, கலை இயக்கத்தை சேகர் கவனிக்கிறார். ஆடை வடிவமைபை வாசுகி பாஸ்கர் கவனிக்கிறார். சண்டை காட்சிகளை ஸடண்ட் சில்வா அமைக்கிறார். ‘மாநாடு’ படத்தின் படபிடிப்பு வேலைகள் விரைவில் துவங்க இருக்கிறதாம்
#Maanaadu #STR #VenkatPrabhu #SureshKamatchi #VHouseProductions #YuvanShankarRaja #KalyaniPriyadarshan #BharathiRaja #SAChandrasekaran #Premgi #Karunakaran #SJSuryah #YGeeMahendra #ManojKBharathi #DanielAnniePop
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ படத்தை இயக்கிய ஜி.டி.நந்து ‘N.K.KANDI’ என்ற பெயரில் இயக்கியிருக்கும் படம்...