‘அப்துல் காலிக்’ ஆனார் சிம்பு!

‘மாநாடு’வில் சிம்புவின் கேரக்டர் பெயர் அப்துல் காலிக்!

செய்திகள் 4-Feb-2020 1:15 PM IST Top 10 கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்சன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிமேஜி, கருணாகரன், மனோஜ் பாரதிராஜா, ஒய்.ஜி.மகேந்திரன், டானியல் ஆனி பாப், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் சிம்பு முதன் முதலாக இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார். இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் இந்த படத்தில் சிம்புவின் கேரக்டருக்கு பொருந்தும் ஒரு பெயரை நாங்கள் தேர்வு செய்வோம். அந்த பெயரை தேர்வு செய்து அனுப்புபவர் ஒரு நாள் முழுக்க ‘மாநாடு’ படப்பிடிப்பு தளத்தில் எங்களோடு இருக்க அனுமதிக்கப்படுவார்’ என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் ‘மாநாடு’ படத்தில் சிம்புவின் கேரக்டர் பெயர் குறித்த அறிவிப்பை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளா. அதில் சிம்பு கேரக்டர் பெயர் அப்துல் காலிக் என்று குறிப்பிட்டுள்ளார்! வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில் ’தைரியத்தை விட பெரிய அச்சுறுத்தல் எதிரிக்கு எதுவும் இல்லை’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

#Maanaadu #STR #VenkatPrabhu #SureshKamatchi #VHouseProductions #YuvanShankarRaja #KalyaniPriyadarshan #BharathiRaja #SAChandrasekaran #Premgi #Karunakaran #SJSuryah #YGeeMahendra #ManojKBharathi #DanielAnniePop

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;