‘யோகி’ பாபு திடீர் திருமணம்!

நகைச்சுவை நடிகர் ‘யோகி’ பாபு,  மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்தார்!

செய்திகள் 5-Feb-2020 1:59 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் ‘யோகி’ பாபு! தனது மாறுபட்ட நடிப்பால் தமிழ் சினிமாவில் தனி ஒரு பாதையை அமைத்துக் கொண்டு நடித்து வரும் ‘யோகி’ பாபு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார். ‘யோகி’ பாபு திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் மஞ்சு பார்கவி! இவர்களது திருமணம் இன்று காலை யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் நடைபெற்றது. மிக எளிமையாக நடந்த இத்திருமணத்தை தொடந்து மார்ச் மாதம் சென்னையில் வரவேர்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்துள்ள யோகி பாபு, மஞ்சு பார்கவி தம்பதியருக்கு ‘டாப் 10 சினிமா’வின் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;