ஹாலிவுட்டில் களம் இறங்கும் ஜி.வி.பிரகாஷ்!

தமிழ்  படங்களை தொடர்ந்து ஹாலிவுட் படத்திலும் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!

செய்திகள் 5-Feb-2020 3:37 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் பாடகராக, இசை அமைப்பாளராக, நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டே படங்களில் ஹீரோவாகவும் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் இப்போது ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்துள்ளார். ‘ட்ராப் சிட்டி’ (TRAP CITY) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் தமிழ் சினிமாவை சேர்ந்த நெப்போலியனும் நடித்துள்ளார். நெப்போலியன் ஏற்கெனவே சில ஆங்கில படங்களில் நடித்துள்ள நிலையில் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், நெப்போலியனுடன் பிரபல் ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி ஜாக்சனும் நடித்துள்ளார். இவர் TROPIC THUNDER, PERCY JACKSON, BIG MOMMA HOUSE போன்ற ஆங்கில படங்களில் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ட்ராப் சிட்டி’ படத்தை RICKY BURCHELL எழுதி இயக்கி உள்ளார். ஏழ்மையில் வாடும் ஒரு ராப் பாடகர் பற்றிய கதையாம் ‘ட்ராப் சிட்டி’. இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள நேஷவில் என்னும் இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;