‘நான் சிரித்தால்…’ படம் உருவாக காரணம் ரஜினி! – இயக்குனர் ராணா

சுந்தர்.சி.தயாரிப்பில் ஆதி நடிக்கும் நான் சிரித்தால் ஃபிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது!

செய்திகள் 5-Feb-2020 4:18 PM IST Top 10 கருத்துக்கள்

‘மீசையை குமுறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்க, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நான் சிரித்தால்’. இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்க இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சுஜாதா விஜயகுமார், படவா கோபி, பாண்டியராஜன், முனீஸ்காந்த், ரவிமரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இயக்குனர் ஷங்கரிடம் ‘2.0’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆதியே இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (4-2-2020) மாலை சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்.சி பேசும்போது, ‘‘இந்த படம் ஆதி நடிப்பில் நான் தயாரிக்கும் மூன்றாவது படம். ‘மீசையை முறுக்கு’ நட்பை மையமாக வைத்து எடுக்கபப்ட்ட படம். ‘நட்பே துணை’ விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படம் ஆதியின் நடிப்பு திறமையை வெளிப்படுத்த எடுத்த படமகும்’’ என்றார்.

படத்தின் இயக்குனர் ராணா பேசும்போது, ‘‘எனது பெற்றோர்கள், எனது குருநாதர் ஷங்கர் மற்றும் ரஜினி ஆகியோருக்கு எனது நன்றிகள்! எனது ‘கெக்க பெக்க’ குறும்படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த் பாராட்டினார். 20 நிமிட ‘கெக்க பெக்க’ படத்திற்கு கிடைத்த ரஜினியின் பாராட்டு தான் 2.20 மணி நேரம் ஓடக்கூடிய இப்படம் உருவாக காரணம்! உலக நாடுகளில் அழுத்தத்தில் இருக்கக் கூடிய முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. நமக்கு இருக்கும் அழுத்தம், தோல்வி, சோகம், கவலைகள், பிரச்சனைகள் போன்றவற்றை தள்ளி வைத்து சிரித்தால் எப்படி இருக்கும் எபதே இப்படம்’’ என்றார் இயக்குனர் ராணா!

படத்தின் கதாநாயகன் ஆதி பேசும்போது, ‘‘ராப் பாடகராக இருந்த என்னை நடிகனாக்கி, இயக்குனராக்கி இந்த இடத்திற்கு கொண்டு வந்தவர் சுந்தர்.சி.அவர்கள் தான். இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் காந்தி. எங்கெல்லாம் சிரிக்கக் கூடாதோ அங்கெல்லாம் சிரிப்பேன். இப்படத்தில் அப்படிப்பட்ட கேரக்டர் எனக்கு! இது நானும் சுந்தர்.சி. அவர்களும் இணைந்த மூன்றாவது படம்! படத்தில் சிரித்துக்கொண்டே நடித்துள்ளேன்! படத்தை பார்க்கும்போது நீங்களும் சிரிப்பீர்கள்’’ என்றார் ஆதி!

இந்த படம் ஃபிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இந்த படத்தின் உலக விநியோக உரிமையை டி.முருகானந்தத்தின் ‘ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்’’ வாங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;