‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், துல்கர் சல்மான் பட இயக்குனர்!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில்  ‘டேவிட்’ ,  ‘சோலா’  படங்களின்  இயக்குர் பிஜாய் நம்பியாரும் பணியாற்றுகிறார்!

செய்திகள் 5-Feb-2020 4:26 PM IST Top 10 கருத்துக்கள்

விக்ரம் நடிப்பில் வெளியான ‘டேவிட்’, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படமான ‘சோலோ’ மற்றும் சில ஹிந்தி படங்களை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்துள்ள இவர் இப்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகிரார். இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிஜாய் நம்பியார் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் க்ளாப் போர்டுடன் அவர் இருக்க, என்றுமே மணி சாரின் உதவி இயக்குனர் தான்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்! கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், லால், அஸ்வின் காக்குமனு, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம் உட்பட பலர் நடித்து வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;