ராஜமௌலியின் ‘RRR’ ரிலீஸ் தேதி?

ராஜமௌலி இயக்கி வரும் ‘RRR’ திரைப்படம்  அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 8-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

செய்திகள் 6-Feb-2020 12:24 PM IST Top 10 கருத்துக்கள்

‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம் ‘RRR’. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை எட்கர் ஜோன் உள்ளிட்டபிரபலங்கள் நடிக்கின்றனர். ஒரு விபத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 8-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் இதுவென்பதால் இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் என்பது நிச்சயம்.

#RRR #Rajamouli #CharanTeja #JrNTR #Samuthirakani #AliaBhatt #AjayDevgn #DaisyEdgarJones #RRRReleaseOn Jan82021

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;