‘பிஸ்கோத்’தில் சந்தானத்துக்கு 3 வேடங்கள், 2 கதாநாயகிகள்!

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்திற்கு பிஸ்கோத் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது!

செய்திகள் 8-Feb-2020 12:52 PM IST Top 10 கருத்துக்கள்

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின் மசாலா ஃபிக்ஸ் நிறுவனமும், M.K.R.P. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் இந்த படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அதன்படி இப்போது படத்திற்கு ‘பிஸ்கோத்’ என்று டைட்டில் வைக்கப்பட்டு அதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் சந்தானம் மூன்று மாறுப்பட வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் அறிமுகம் சுவாதி முப்பாலா நடிக்கின்றனர். இவர்களில் தாரா அலிஷா பெர்ரி சந்தானத்துடன் ‘A1’ படத்தில் நடித்தவராவர். இவர்களுடன் மேலும் இப்படத்தில் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், அடுகளம் நரேன், சிவசங்கர் ஆகியோரும் நடிக்க முக்கிய கேரக்டர் ஒன்றில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியும் நடித்துள்ளார். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படத்திற்கு ரதன் இசை அமைக்கிறார். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் ‘பிஸ்கோத்’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

#Boomerang #RKannan #SowkarJanaki #MottaRajendran #LolluSabhaManohar #Anandraj #Santhanam #Biskoth #TaraAlishaBerry #SawthiMuppala #Radhan #Dikkilonna #MKRPProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர்


;