சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வெற்றிப் பமாக அமைந்த படம் ‘ஹெலன்’. மாத்துக்குட்டி சேவியர் இயக்கிய இந்த படத்தில் அப்பா, மகளாக லால், அன்னா பென் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்து தயாரிக்கிறார் அருண் பாண்டியன். தனது ‘A&P GROUP’ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கும் அருண் பாண்டியன் இப்படத்தில் மாலையாளத்தில் லால் நடித்த அப்பா கேரக்டரில் நடிக்க, மகளாக அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். இந்த படத்தை ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ ‘ஜுங்கா’ முதலான படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா நேற்று எளிமையான முறையில் சென்னையில் நடைபெற்றது. ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அருண் பாண்டியன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக ரீ-எண்ட்ரியாகிறார் என்பதுடன் தும்பா படத்திற்கு பிறகு கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடிக்கும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த படம் குறித்த மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
சினிமாவில் நடிகர், தயாப்பாளர், விநியோகஸ்தர் என்று பல்வேறு முகங்களை கொண்டவர் அருண் பாண்டியன். இவரது...
‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயகக்த்தில் விஜய்சேதுபதி...
விஜய்சேதுபதி சொந்தமாக தயாரித்து நடிக்கும் படம் ‘ஜுங்கா’. விஜய்சேதுபதி நடிப்பில் ‘இதற்குதானே...