இன்னும் ரிலீசாகவில்லை! அதற்குள் தெலுங்கு ரீ-மேக்!

அசோக் செல்வன் தயாரித்து நடிக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தை பி.வி.பி.சினிமா நிறுவனம் தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது!

செய்திகள் 8-Feb-2020 3:51 PM IST Top 10 கருத்துக்கள்

அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ள இப்படம் காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாகிறது. அசோக் செல்வனின் ‘ஹேப்பி ஹை பிக்சர்ஸ்’ என்ற நிறுவனமும், டில்லி பாபுவின் ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீ-மேக் உரிமை விற்கப்பட்டுள்ளது. ‘ஓ மை கடவுளே’ படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்து தயாரிக்க, பிரபல தயாரிப்பு நிறுவனமான் ‘PVP Cinema’ முன் வந்துள்ளதாக அசோக் செல்வன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். ஒரு படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரீ-மேக் உரிமை விற்கப்படுவது அரிதாக நடக்கக் கூடிய விஷயமாகும்.

இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்விகா சிங்குடன் வாணி போஜன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, விஜய் சேதுபதி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடித்துள்ளனர். சென்சாரில் U/A சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள இப்படம் வித்தியாசமான காதல் கதையாக உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;