சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மற்றும் ‘மாரா…’ என்று துங்கும் தீம் சாங் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான ‘வெய்யோன் சில்லி…’ என்ற பாடல் ரசிகர்களுக்கு காதலர் தினப் பரிசாக வருகிற 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள். இது குறித்த அதிகாரரபூர்வ தகவலை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். ஆனால் இந்த பாடலை மாறுபட்ட முறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
‘சூரரைப் போற்று’ விமான சேவையை துவங்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படமாகும். இந்த படத்தின் கதைக்கும் விமானத்துக்கும் நிறைய சம்பந்தம் இருப்பதால் மேற்குறிப்பிட்ட ‘வெய்யோன் சில்லி’ பாடலை சென்னை விமான நிலையத்தில் வெளியிட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் பாடல் ஏர்போர்ட்டில் வெளியிடுவது இதுதான் முதன் முறையாம். அந்த சாதனையை சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ செய்ய இருக்கிறது.
கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி கதையின் நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், கருணாஸ், பரெஷ் ராவல், ஊர்வசி உட்பட பலர் நடிக்கின்றனர். சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனமும் ‘Sikhya Entertainment’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#SooraraiPottru #Suriya #Suriya38 #GVPrakashKumar #Aparnabalamurali #SudhaKongara #MohanBabu #MaaraTheme #SparkPictures #Veyyonsilli #VeyyonsilliAudioReleaseOnFeb13th
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...