வானம் கொட்டட்டும் – விமர்சனம்

ஃபீல் குட் ஃபேமிலி டிராமா!

விமர்சனம் 10-Feb-2020 1:33 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Dhana Sekaran
Production: Madras Talkies
Cast: Vikram Prabhu, Aishwarya Rajesh, Madonna Sebastian, Sarathkumar, Raadhika Sarathkumar & Shanthanu Bhagyaraj
Music: Sid Sriram
Cinematography: Preetha Jayaraman
Editor: Sangathamizhan E.

மணிரத்னம் தயாரிக்க, மணிரத்னத்தின் சிஷ்யரும், ‘படை வீரன்’ படத்தை இயக்கியவருமான தனா இயக்கியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், இயக்குனர் பாலாஜி சக்திவேல், நந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வானம் கொட்டட்டும்’ மணிரத்னத்தின் முத்திரை படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

சின்னமனூரில் மனைவி ராதிகா, சிறு வயது மகன் விக்ரம் பிரபு, சிறுவயது மகள் ஐஸ்வர்யா ராஜேஷுடன் வசித்து வருகிறார் சரத்குமார். இவரது அண்ணன் பாலாஜி சக்திவேல். அண்ணனை கொலை செய்ய முயற்சித்தவரை தம்பி சரத்குமார் கொன்று விட்டு ஜெயிலுக்குப் போகிறார். இதனால் ராதிகா தன் சிறு பிள்ளைகளுடன் பிழைப்புக்காக சென்னை வருகிறார். ராதிகா தன் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறார். விக்ரம் பிரபு கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை மண்டி வைத்து நடத்தி வருகிறார். விக்ரம் பிரபுவுக்கு கல்லூரியில் படித்து வரும் தன் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் உதவியாக இருக்கிறர். இந்நிலையில் சரத்குமார் 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை முடிந்து திரும்பி வருகிறார். ஆனால் சரத்குமாரை மகன் விக்ரம் பிரபுவும், மகள் ஐஸ்வர்யா ராஜேஷும் ஏற்க மறுக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் மீது பெரும் பாசத்தை வைத்து அவர்களது வாழ்க்கை முன்னேற பல்வேறு காரியங்களை செய்கிறார் சரத்குமார். இந்நிலையில் சரத்குமார் கொன்றவரின் மகன் நந்தா சரத்குமாரை கொன்று பழி வாங்க துடிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘வானம் கொட்டட்டும்’.

படம் பற்றிய அலசல்

மணிரத்னமும், இயக்குனர் தனாவும் இணைந்து எழுதியுள்ள இந்த படத்தின் கதை பெற்றோர்களின் கண்மூடித்தனமான பாசம், பிள்ளைகளின் மன நிலை ஆகிய இரண்டு விஷயங்களை மையப்படுத்தி அமைந்துள்ளது. ர் உணர்ச்சிவசப்பட்டு செய்த ஒரு விஷயம் ஒரு குடும்பத்தை எந்த அளவுக்கு சிதைக்கிறது என்ற கருத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதையில் எந்த புதிய விஷயங்கள் இல்லை என்றாலும் சொல்லப்பட்டுள்ள விதம் அருமை!

கணவன், மனைவியாக வரும் சரத்குமார், ராதிகாவுக்கு இடையிலான பாசப் பிணைப்பு, இவர்கள் இருவருக்கும் பிள்ளைகள் மீது இருக்கும் அன்பு, அம்மா கஷ்டப்பட காரணமாக இருந்த அப்பா மீது பிள்ளைகளுக்கு ஏற்படும் கோபம், அதன் விளைவாக நடக்கும் சம்பவங்கள் என்று ‘வானம் கொட்டட்டும்’ படத்தை அருமையான ஒரு குடும்ப கதையாக, மணிரத்னம் இயக்கும் படங்கள் ஸ்டைலில் இயக்கி உள்ளார் தனா! டூயெட் பாடல், திணிக்கப்பட்டது மாதிரியாக வரும் காமெடி காட்சிகள், சண்டை காட்சிகள் என்று எந்த கமர்ஷியல் விஷயங்களையும் நம்பாமல் கதையை நேர்த்தியாக நகர்த்தியிருக்கும் தனாவுக்கு சித் ஸ்ரீராம் இசையில் அமைந்துள்ள பாடல்கள், பின்னணி இசை, ப்ரீத்தா ஜெயராமின் ஒளிப்பதிவு, சங்கத்தமிழனின் படத்தொகுப்பு ஆகிய டெக்னிக்கல் விஷயங்கள் பெரிதும் கை கொடுக்க, ‘வானம் கொட்டட்டும்’ கவனம் பெறும் படமாக அமைந்து ரசிக்க வைக்கிறது!

நடிகர்களின் பங்களிப்பு

இந்த படத்திற்கு பலம் சேர்த்த விஷயஙக்ளில் சரத்குமார், ராதிகாவின் நடிப்பு முக்கிய பங்கு வகித்திருக்கிறது. நீண்ட நாட்களாக ஜெயிலில் இருந்து வெளியே வரும் சரத்குமாரை அவரது பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது தவியாய் தவிப்பது, அவர்கள் மீதான பாசத்தில் சில விஷயங்களை செய்ய போய் அது விபரீதத்தில் முடிய மேலும் அவர்களது கோபத்துக்கு ஆளாவது, தன்னை வெட்ட வந்த நந்தாவிடம் என்னை வெடிக்கோ, இதனால் இந்த பிரச்சனை முடியும் என்றால் வெட்டிக்கொ என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்வதாகட்டும் சரத்குமார் நடிப்பில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். சரத்குமாருக்கு சளைக்காதவராக ராதிகாவும் ஒரு நல்ல மனைவியாக, பொறுப்புள்ள ஒரு அம்மாவாக, சிறந்த நடிப்பை வழங்கியுள்ளர்.

விக்ரம் பிரபுவுக்கு இது முக்கியமான படம்! ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அண்ணனாக, அப்பா மீது வெறுப்பு கொண்டவராக, பணக்கார வீட்டுப் பெண் மடோனா செபாஸ்டியன் விரும்பும் இளைஞராக, பிசினெஸ் செய்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞராக என்று விக்ரம் பிரபு இப்படத்தில் மாறுபட்ட குணாதிசயம் கொண்டவராக சிறப்பாக நடித்துள்ளார். இவரது தங்கையாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சுட்டித்தனம் கலந்த கதாபாத்திரம். பால்யகால நண்பரான சாந்தனு பாக்யராஜுடன் ஊர் சுற்றுவது, அண்ணன் விக்ரம் பிரபுவுகு வியாபரத்தில் உதவுவது என்று ஐஸ்வர்யா ராஜேஷும் தனது கேரக்டரின் தன்மையை உணர்ந்து சிறந்த பங்களிப்பு வழங்கியிருக்கிறார். கடனில் தத்தளிக்கும் பெரிய வீட்டு பெண்ணாகவும், விக்ரம் பிரபுவிடம் மனதை பறிகொடுத்தவராகவும் வரும் மடோனா செபாஸ்டியனுக்கு பரிதாபத்தை அள்ளும் கேரக்டர்! நடிப்பில் அந்த கதாபார்த்திரத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் மடோனா! சரத்குமாரின் அண்ணனாக வரும் பாலாஜி சக்திவேல், சரத்குமாரை பழி வாங்க துடிக்கும் கேரக்டரில் நடித்திருக்கும் நந்தா ஆகியோரது நடிப்பும் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது.

பலம்

1. சொன்ன கதைய காட்சிப்படுத்திய விதம்!

2. நடிகர்களின் பங்களிப்பு

3.இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு முதலான டெக்னிக்கல் விஷயங்க்ள்

பலவீனம்

1. கதையில் எந்த புதிய விஷயங்களும் இல்லாதது..

2. மெதுவாக பயணிக்கும் திரைக்கதை

மொத்தத்தில்…

மணிரத்னத்தின் அக்மார்க் முத்திரைகளுடன் குடும்ப செண்டிமெண்ட் கலந்த படமாக வெளியாகியுள்ள இந்த ‘வானம் கொட்டட்டும்’ ஃபேமிலி ஆடியன்ஸுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது!

ஒருவரி பஞ்ச் : ஃபீல் குட் ஃபேமிலி டிராமா!

ரேட்டிங் : 5/10

#VaanamKottattum #VaanamKottattumMovieReview #VikramPrabhu #AishwaryaRajesh #RaadhikaSarathKumar #SarathKumar #Shanthanu #Nandha #MadonnaSebastian #AmitashPradhaan #BalajiSakthivel #SidSriram #ShakthiShreeGopalan #KannuThangomSong

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;