வெளியானது துல்கர் சல்மான் பட ரிலீஸ் தேதி!

துல்கர் சல்மான் நடிக்கும்  ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இம்மாதம் 28-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 19-Feb-2020 12:27 PM IST Top 10 கருத்துக்கள்

‘வாயை மூடி பேசவும்’, ‘ஒகே கண்மணி’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி தமிழ் படங்கள் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மற்றும் ‘வான்’. இதில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் துல்கர் சல்மானுடன் ரிது வர்மா கதாநாயகியாக நடிக்க மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தக்‌ஷன், இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி உட்பட் பலர் நடிக்கின்றனர். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தின் அனைத்து வேலைகளும் இப்போது நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன் படி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இம்மாதம் 28-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆன்டோ ஜோசஃப் பிலிம்ஸ்’ நிறுவனமும், ‘வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை கே.எம்.பாஸ்கரன் கவனிக்க, படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார். இப்படத்திற்கு ‘மசாலா காஃபி’ என்ற இசை குழுவினர் இசை அமைத்துள்ளனர். காதல் கதையாக உருவாகியுள்ளதாம் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ட்ரைலர்


;