5 மொழி படத்தில் பிரியா பவானி சங்கர்!

5 மொழிகளில் வெளியாகும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற படத்தில் நடிக்கிறார் பிரியா பவானி சங்கர்!

செய்திகள் 19-Feb-2020 3:48 PM IST Top 10 கருத்துக்கள்

‘மேயாத மான்’, ‘மான்ஸ்டர்’ படப் புகழ் நடிகையான பிரியா பவானி சங்கர் இப்போது மாஃபியா, பொம்மை, இந்தியன்-2 உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் நரேன் இயக்க, அருண் விஜய் ஹீரோவாக நடிக்க பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள ‘மாஃபியா’ வருகிற 21-ஆம் தேதி வெளியாகிறது. ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக நடிக்கும் ‘பொம்மை’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்தது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வ்ருகிறது.

இந்நிலையில் தெலுங்கில் பிரபல நடிகரான மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு ஹீரோவாக நடிக்கும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற படத்தில் நடிக்கவும் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கும் இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்த மாதம் முதல் வாரம் வெளியாக இருக்கிறது.


#AhamBrahmasmi #ManchuManoj #PriyaBhavaniShankar #Monster #MeyaadhaMaan #Bommai #PBS

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;