பட புரொமோஷனுக்கு வராத த்ரிஷாவுக்கு கண்டனம்!

‘பரமபதம் விளையாட்டு‘ பட விழாவில் த்ரிஷாவுக்கு கண்டனம் தெரிவித்த சினிமா பிரபலங்கள்

செய்திகள் 22-Feb-2020 1:43 PM IST Top 10 கருத்துக்கள்

திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. த்ரிஷா முதன் முறையாக ஆக்‌ஷன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் அடுத்த வாரம் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. த்ரிஷாவின் 60-ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் சினிமாஸில் உள்ள சீஸன் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான திருஞானம், இசை அமைப்பாளர் அம்ரீஷ், ஒளிப்பதிவாளர் ஜேடி, இப்படத்தில் நடித்த விஜய் வர்மா, நடிகை சங்கீதா, குழந்தை நட்சத்திரம் மானஸ்வி ஆகியோருடன் தமிழ் திரையுலகை சேர்ந்த கே.ராஜன், கே.பாக்யராஜ், டி.சிவா, சுரேஷ் காமாட்சி, கவிஞர் சொற்கோ உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆனால் படத்தின் கதாநாயகி த்ரிஷா மட்டும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இது குறித்து சுரேஷ் காமாட்சி பேசும்போது, ‘பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் போன்றோர்கள் தாங்கள் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு வரும்போது, இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. உங்களை போன்று புகழ் பெற்ற்வர்களை வைத்து படம் எடுத்தால் தான் விளம்பரமாகும் என்று படத்தை எடுக்கிறார்கள். ஆனால் நீங்களே வராமல் இருப்பது எப்படி நியாயமாகும்?’’ என்ற கேள்வியை முன் வைத்தார்.தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, ‘‘இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு த்ரிஷா வராதது வருத்தத்திற்குரிய விஷயம்! தொடர்ந்து இது போன்று தான் நடிக்கும் படங்களின் விளம்பரங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் அவரது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பி தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக த்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்’’ என்றார் டி.சிவா!படத்தை தயாரித்து இயக்கியிருக்கும் திருஞானம் பேசும்போது, ‘‘த்ரிஷாவின் 60-வது படம் இது. இந்த வாய்ப்பை தந்த த்ரிஷாவுக்கு நன்றி! கடினமாக உழைத்து மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளேன். இந்த படத்திற்கு எல்லோரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

இவர்கள் தவிர விழாவில் கே.பாக்யராஜ், கவிஞர் சொற்கோ, தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் விஜய் வர்மா, நடிகை சங்கீதா உட்பட பலர் பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;