மார்ச் 6-ஆம் தேதி வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ மார்ச்-6ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 25-Feb-2020 12:45 PM IST Top 10 கருத்துக்கள்

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, நடாஷா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை எஸ்.கே.செல்வகுமார் கவனிக்க, படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கவனித்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் சமீபத்தில் சென்சார் குழுவினர் பார்வைக்கு சென்றது. படத்தில் நிறைய ஆட்சேபகரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்றும் இந்த காட்சிகளை நீக்கினால்தான் படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய படமாக ‘U’ சான்றிதழ் வழங்க முடியும் என்று சென்சார் குழு உறுப்பினர்கள் கூறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதற்கு படக்குழுவினர் சம்மதம் தெரிவிக்காததால் படத்திற்கு ‘A’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த படத்தை ஜனவரி 24-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் அந்த தேதியில் ‘ஜிப்ஸி’ வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து ‘ஜிப்ஸி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி இப்போது வெளியாகி உள்லது. அதாவது இப்படத்தை மார்ச் 6-ஆம் தேதி ரிலிஸ் செய்ய இருக்கும் தகவலை படத்தின் இயக்குனர் ராஜுமுருகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜீவா, நடாஷா சிங்குடன் மலையாள இயக்குனர் லால் ஜோஸ், மலையாள நடிகர் சன்னி வெயின் மற்றும் சுசீலா ராமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
#Jiiva #RajuMurugan #Joker #AmbethKumar #OlympiaMovies #Gypsy #NatashaSingh #SanthoshNarayanan #SelvakumarSK #RaymondDerrickCrasta #GypsyFromMarch6th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;