பிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய தகவல்!

’ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சாங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தகவல்கள்!

செய்திகள் 27-Feb-2020 12:53 PM IST Top 10 கருத்துக்கள்

ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பிரேம்ஜி அமரன் மற்றுமொரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் இந்த படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சாங்கையா இயக்குகிறார் என்றும் தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம்.

‘டச்வுட் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனமும், ‘சூப்பர் டாக்கீஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது சிங்கப்பெருமாள் கோவிலில் நடந்து வர, இன்றுடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் நிறைவடைகிறதாம். இந்த படத்தில் பிரேம்ஜி அமரனுடன் ‘பிக்பாஸ்’ புகழ் ரேஷ்மா ஒரு கதாநாயகியாக நடிக்க, இன்னொரு நாயகியாக ‘ஆட்டோ ஷங்கர்’ வெப் சீரியலில் நடித்த ஸ்வயம் சித்தா நடிக்கிறார். விமர்சன ரீதியாக பேசப்பட்ட படம் ‘ ஒரு கிடாயின் கருணை மனு’. இந்த படத்தை தொடர்ந்து சுரேஷ் சாங்கய்யா இயக்கி வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் இதர தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் தவிரி வெங்கட் பிரபு இயக்கும் சிம்புவின் ‘மாநாடு’ படத்திலும் நடித்து வருகிறார் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா டீஸர் 2.0 - டோப் Anthm


;