நேமிசந்த் ஜபக் தயாரிக்க அறிமுக இயக்குனர் A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம் ‘பொன்மாணிக்க வேல்’. இந்த படத்தில் பிரபுதேவாவுடன் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, இவர்களுடன் இயக்குனர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்’ என்ற திருக்குறளின் கருத்துடைய கதையாக இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு அதனை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். அனால் பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’ படம் மட்டுமே ரிலீசானது. இந்நிலையில் புரபுதேவாவின் ‘பொன்மாணிக்க வேல்’ படத்தை மார்ச் 6ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. இசைக்கு டி.இமான், ஒளிப்பதிவுக்கு கே.ஜி.வெங்கடேஷ், சண்டை காட்சிகளுக்கு அன்பறிவ் என இப்படத்தில் பெரிய பெரிய டெக்னீஷியன்கள் பணியாற்றியுள்ளனர்.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்த படம் ‘கழுகு’. இந்த அடம் வெற்றி பெற்றதை...
ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக...