மாறுபட்ட கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் பரத் அடுத்து நடிக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’. லேஷி கேட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அனூப் காலித் தயாரிக்கும் இந்த படத்தில் பரத்துடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இப்படத்தை தயாரிக்கும் அனூப் காலித்தும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தை ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுனிஷ் குமார் இயக்குகிறார்.
வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு ஒன்றை நடத்தி வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை அரங்கேற்றி முடிக்க பார்க்கிறார்கள். ஆனால் அந்த திருட்டின்போது எதிர்பாரத சில சம்பவங்கள் நடக்கிறது! அந்த சம்பவங்கள் என்ன? என்பதை சில திருப்பங்களுடன் சொல்லும் படமாம் இது! தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு கைலாஷ் மேனன் இசை அமைக்கிறார். சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘தாராள பிரபு’....
பாரதிராஜா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘அன்னக்கொடி’. 2013-ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து ஒரு...